Monday 16 January 2012

காலம் ஓடிக்கொண்டிருக்கிறது


  காலம் ஓடிக்கொண்டிருக்கிறது

  நியாயத்தீர்ப்பும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.

  சாட்சிகளாக பினந்தின்னிக் கழுகுகள்,ஓநாய்கள்
 
  மற்றும் சில சிப்பாய்கள்.

  இறுதி யுத்தம் என்று பெயர் சூட்டப்பட்ட பொருந்தாப் போரில்

  முள்ளிவாய்க்காலிலும்,நந்திகடலிலும்,பதுங்கு குழிகளிலும்

  கொத்துக்குண்டுகளால் வீழ்த்தி வீசப்பட்ட பல்லாயிரம் பேரும்

  நீதிமன்றக் கூடத்தில்.

  அவர்களின் பலத்த சிரிப்பொலி குற்றவாளிகளை

  அதிரச்செய்கிறது.

  ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகை உடைத்தாலே

  இப்பிரபஞ்சத்தை ஒழுங்குபடுத்தும் ஆற்றலின் ஒரு இழை

  அறுந்துபடுவதாக கூறுவோர்

  இப்போது என்னகூறுவர்?

  து ற்பை இழந்து போய்விட்டநீதிமன்றம்

  மௌனமாகவேடிக்கை பார்க்கிறது.

  குற்றவாளிக் கூண்டில் அதிபரும் ம்பிகளும் ண்பர்களும்

  எக்காளச்சிரிப்பை உதிர்க்கும் போது ஒரு பெண் கேட்டாள்

  'பாரப்போரின் டைசியில் துரியோதனை ட்டும்

   பாண்டர்கள் கொல்லவில்லை,ஏன் தெரியுமா?'

  'தெரியாது'

  'எப்படி இறந்துபோனான் தெரியுமா?'

  'தெரியாது'

  'பாண்டர்கள் க்கு உயிர்ப் பிச்சை அளித்த

   கேவத்தினால் ற்கொலை செய்துகொண்டான்'

   க்கு ஏதேனும் ண்டனை ப்பவேண்டும்

   அதன் மூலம் ன் பாவங்கள் நீக்கப்பவேண்டும் என

   அதிபரும் சுற்றமும் விரும்புகின்றர்.
  அதிபர் குற்றற்றர் எனநீதிமன்றம் தீர்ப்பு ருகிறது.

   நீதிமன்றத்தின் நிர்வாணம் குறித்து ந்திக்கல் சிரிக்கிறது.
 
முள்ளிவாய்க்கால் சாம்பல் தேடிச் சென்ற அதிபர் அங்கு

 இருந்த சாம்பல்,எலும்பு  மேட்டை அண்ணாந்து பார்க்க

 தானும் ஒரு இறந்த பிணம்தான் என்பது நினைவுவர‌‌

 சாம்பல்மேடு பிளவுற்று என்றென்றும் தீராத புதைகுழிக்குள்

 சென்றுகொண்டிருந்தனர் அதிபரும் அவரது சுற்றமும்.

No comments:

Post a Comment