Saturday 14 January 2012

பணித்துறைத் தெரிவில் ஒரு இளைஞனின் ஆழ்ந்த சிந்தனை - 2


  அந்த அகத்தூண்டலின் மூலதனத்தை ஆராயாமல் இதை நாம் எப்படி இனம் கண்டுகொள்வது?எது பிரமாண்டமானதோ அது பளபளக்கிறது.எது பளபளக்கிறதோ அது பேராவலைத்(AMBITION)தூண்டுகிறது.அப்பேராவல் நம்முள் அகக்கிளர்ச்சியை உருவாக்கியிருக்க முடியும் அல்லது அப்பேராவலின் விளைவை நாம் இதுதான் அகத்தூண்டுதல்(INSPIRATION)என்றும் கருதியிருக்க முடியும்.ஆனால் பேராவலால் உந்தப்பட்ட மனிதனை அறிவால் கட்டுப்படுத்த இயலாது.அவனது கட்டுக்கடங்காத உணர்ச்சித்தூண்டுதல் எதைப் பரிந்துரைக்கிறதோ அதில் கண்மூடித்தனமாகக் குதிக்கிறான்.அதற்குப்பிறகு அவன் தனது நிலையை தானே தீர்மானிக்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறான்.சந்தர்ப்பமும்,மாயையும் அவன் நிலையைத் தீர்மானிக்கத் தொடங்குகின்றன.

    அதோடு மட்டுமின்றி நம்முடைய ஆற்றல் முழுவதுமாக பரிமளிப்பதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் பணித்துறையை நாம் சுவீகரித்துக் கொள்வதற்கும் நமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.அதானது நம் வாழ்வின் பெரும்பகுதியோடு நெருங்கி உறவாடக்கூடிய ஒன்று.அப்படியாக இருக்கக்கூடிய நம்மைக் களைப்புறச் செய்யாமல் நம் உற்சாகத்தைக் குறைத்திடாமல் உந்துணர்வை வாட்டிவிடாமல் அமைந்திட வாய்ப்பில்லாத பட்சத்தில் நம்முடைய லட்சியங்கள் திருப்தியுறாமல் கனவுகள் மெய்ப்படாமல் நாம் இறைவனையும் தாக்கிப்பேசி மனிதக்குலத்தையும் சபிக்கத் தொடங்கிவிடுகிறோம்.
 ஆனால் பேராவல் ட்டுமே னிதனை ஒரு குறிப்பிட்டணிக்கானஉடடி உற்சாகத்தைத் தூண்டவேண்டும் என்றில்லை.நாம் ம்முடையற்பனையிலே அதற்கு அழகேற்றி அதுவே வாழ்க்கை க்கு அளிக்கக்கூடியஉன்னம்(THE HIGHEST)எனத்தோன்றஅப்படிப்பட்டசுயமுடிவுக்குக்கூடநாம் ஆளாகியிருக்கலாம்.நாம் அதை நுணுக்கமாகஆராயவில்லை.அதை முழுமையாகப் ரிசீலிக்கவில்லை.அஃதானது ம்மீது சுமத்தும் பொறுப்பினை நாம் முழுதாகஉணர்வதில்லை.அதை நாம் காண்பது ற்றுத் தொலைவில் இருந்துதான்.தொலைவுகள் எல்லாம் ஏமாற்றத்தக்கவை.

   ம்முடையஅறிவு ட்டுமே க்கு இங்கே ஆலோசனை வழங்கஇயலுமா?அனுபமும் தீவிரமும் இங்கே துணைக்கு அழைக்கப்படாமல் உணர்ச்சித்தூண்டுதல் ஏமாற்றிடற்பிதம் ம் ண்களை இருட்டாக்கிவிடுகிறது.

   பின் ம் ண்களை யாரை நோக்கித்தான் திருப்புவது?அறிவு ம் உதவிக்கு இயலாதபோது யார் க்கு ஆதவு கொடுப்பது?

        ம் பெற்றோர்கள்தான் அதை செய்யவேண்டும்.வாழ்க்கைப் பயணத்தில் நெடுந்தூரம் பயணித்தவர்களும் விதியின் கடுமையை அனுபவித்தவர்கள் என்ற அடிப்படையிலும் அவர்கள்தான் நம்மை வழிநடத்தத் தலைப்பட்டவர்கள் என நம் இதயம் சொல்லும்.அவர்களது கருத்துக்குப்பின் நம் உந்துதல் உற்சாகத்தின் தீவிரம் குறையாமல் இருக்குமேயானால் நாம் ஒரு குறிப்பிட்ட பணியை உண்மையாக நேசித்தோமேயானால் அதை தீவிரமாக ஆராய்ந்த பின்னரும் அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என நாம் திடமாக நம்பினோமேயானால் அப்போது மட்டுமே நாம் பணியை ஏற்றுக்கொள்ளவேண்டும்.அப்படி இருக்கும்போது நம்முடைய அவசரத்தன்மையோ ஆர்வமிகுதியோ நம்மை ஏமாற்றிவிடாது.

  இதற்குத்தான் நாம் அழைக்கப்பட்டிருப்பதாய் நாம் நம்பும் பணி நமக்கு எப்போதும் வாய்ப்பதில்லை.நாம் அதை தேர்ந்தெடுப்பதற்கு முன்னரே நம் சமூகத் தொடர்புகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிவிடுகின்றன.உதாரணத்திற்கு நம்முடைய உடற்கட்டமைப்பு,மனப்பாங்கு இன்னபிற.நம்முடைய உடற்கட்டமைப்பே ஒரு அச்சுறுத்தும் தடையாக விளங்கக்கூடும்.அதன் உரிமை மீது கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமையில்லை.அவற்றைத் தாண்டிச்செல்ல நாம் முயல்வோம் என்பது உண்மையே.ஆனால் அப்படி செய்யும்போது நம்முடைய வீழ்ச்சி அதிதீவிரமாக இருக்கும்.ஏனென்றால் நாம் நொறுங்கிக்கொண்டிருக்கும் இடர்பாடுகளின் மீது புதிய கட்டுமானத்தை தீர்மானிக்க முயல்கிறோம் என்று அர்த்தம்.

  நம்முடைய உளவியல்,உடலியல் கோட்பாடுகளும் பயனுடைய தேவைகளுக்குமான மகிழ்வற்ற போராட்டமாகவே வாழ்க்கை நீடிக்கும்.

  தன்னுள் போரிடும் கூறுகளுக்கு இணக்கமான தீர்வைக்காண முடியாத ஒருவனால் எப்படி வாழ்க்கையில் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளமுடியும்?எப்படி அவ‌னால் அமைதியாக‌ செய‌ல்ப‌ட‌முடியும்?அமைதியிலிருந்துதானே நுணுக்க‌மான‌ உய‌ரிய‌ செய‌ல்க‌ள் தோன்ற‌முடியும்.அமைதி என்ற‌ நில‌த்தில் இருந்து ம‌ட்டுமே முதிர்ந்த‌ க‌னிக‌ள் விளைய‌ முடியும்.

 
- இன்னும் வரும்
('Reflections of a  Youngman on the Choice of a Profession' என்ற தலைப்பில் கார்ல் மார்க்ஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
 மொழிபெயர்ப்பு - டாக்டர் .மருதுதுரை,கோ.வெங்கடாசலபதி)

    http://cs-sundaram.blogspot.in/2012/01/3.html

No comments:

Post a Comment