Saturday 5 November 2011

நீருதிர்க் காலம்

  மழை பெய்யாத ஒரு மழைக் காலத்தில் ஒரு குளம் பட்ட துன்பங்களை இக்கவிதை சொல்ல முயன்றது.ஆக்கியது அடியேன்தான்!



            நீருதிர்க் காலம்


       இன்று வீழ்வோம் - அறிந்தும்
       இய‌ல்பாய் மொட்டுக‌ள்

       தரையில் கனத்துப் படரும் 
       தாம‌ரை இலைக‌ள்

       ச‌க‌தியில் இரை தேடும்
       மீன்கொத்திக‌ள்,நாரைக‌ள் ...

      ச‌ல‌ன‌ம‌ற்ற‌ நீரைப் ப‌ருக‌ விரும்பி
       தாக‌மாய் திரும்பும் மாடுக‌ள் ...

      ந‌ர‌க‌மாகும் ஒரு குள‌ம்
       ம‌னித‌ன் இறைத்த‌ ம‌றுக‌ணம். 

1 comment:

  1. மிகத் தாமதமாகத்தான் படித்தேன் சண்முகம்.
    நீருதிர்க் காலம் ஒரு கண்ணீருதிரும் கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete