Tuesday 3 January 2012

புய‌லாக‌ மாறும் ம‌க்க‌ளின் கோப‌ம்

புதுச்சேரிக்கு புயல் சேதம் குறித்து பார்வையிடச் சென்ற .சிதம்பரத்தை மக்கள் முற்றுகையிட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்..சிதம்பரம் கூறிய சமாதானத்தை மக்கள் பொருட்படுத்தவில்லை.இலவசப் பொருட்களை மக்களுக்குத் தருவதற்காக எடுத்துச் சென்ற விஜயகாந்துக்கும் இதே நிலைமைதான்.ஜெயலலிதா போனாலும்,கருணாநிதி போனாலும் இதே இக்கட்டைத்தான் சந்திப்பார்கள்.மக்களை பிச்சைக்காரர்களாக நினைத்துக்கொண்டு இலவசங்களை தூக்கி எறிவது,மக்களை பக்தர்களாக நினைத்துக்கொண்டும்,தங்களை கடவுளாகவும் நினைத்துக்கொண்டும் மக்களுக்கு ஆசி வழங்குவது போல நடந்து செல்வது.மக்கள் இப்போது கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்கள்.கடந்த 5 நாட்களாக பால் இல்லை,தண்ணீர் இல்லை,குடியிருக்க வீடு இல்லை.அரசு 2000 தருமாம்.அதையும் டாஸ்மாக் வழியாக திருப்பி எடுத்துக்கொள்ளும்.இயற்கை தந்த கடுமையான சோதனையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வல்ல சக்தியைப் பெற்றிருப்பது அரசு மட்டும்தான்.அரசு மனமுவந்து மக்களுக்கு உதவவேண்டும்.அதனை கடமையாகச் செய்யவேண்டுமேயல்லாது பிச்சையிடுவதுபோல செய்யக்கூடாது.பார்வையிட வரும் அரசியல்வாதிகள் மக்களின் துன்பத்தில் பங்கெடுக்கவேண்டுமேயன்றி வெறும் பார்வையாளராக மாறிவிடக்கூடாது.வெறும் நடிப்புக்காக வரும் அரசியல் தலைவர்களை மக்கள் துரத்திவிடவே செய்வார்கள்.மக்கள் இத்தகைய இக்கட்டானத் தருணங்களில் செயலை மட்டுமே விரும்புவார்கள். மக்கள் தங்களின் துன்பங்களிலிருந்து உடனடியாக வெளியேற அரசிடமிருந்து பெரும் உதவியை எதிர்பார்ப்பார்கள்.ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அவர்களுக்கு அரசைத் தவிர வேறு யார் நிறைவான உதவியை செய்திட முடியும்? தொண்டு நிறுவனங்கள் செய்வதுபோல அரசும் 1000,2000-த்தோடு நிறுத்திக்கொள்ளுமானால் க்களின் கோபம் புயலாகமாறும்.த்தியஅரசும் உடடியாகஇடைக்காலநிதியை ங்கஅமைச்சர் சிதம்பம் முயவேண்டும். அரசியலை துரத்திவிட்டு முழுமூச்சாகநிவாரப் ணிகளை அரசு செய்யுமானால் அதற்குரியபெரும்பலனை ஆள்வோர் அடைந்தே தீருவர்.



No comments:

Post a Comment